Monday, April 14, 2014

சித்திரை மக்களே வருக
சிந்தனை தெளிவை தமிழர்களுக்கு தருக.

வருடத்தின் தொடக்கம் அல்ல 
வசந்தத்தின் தொடக்கம்!

உன் வரவால் மேகம் கறுக்கட்டும்
தானியங்கள் நிறையட்டும்
விலை ஏற்றம் குறையட்டும்!

எங்களை வாழவைக்க சித்திரையே
நீ வருக..

எங்களுக்கு சிந்தனை தெளிவை தருக..!

இப்படிக்கு

B.R.தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

Thursday, April 10, 2014

யாதவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் (BC – YADAV) 25% இட ஒதிக்கிடு வேண்டும். 

யாதவர்களின் ஓட்டு யாதவர்களுக்கே அவர்கள் போட்டியிடாத இடத்தில் நோட்டோ வை தேர்ந்து எடுங்கள்.

செல்வ செழிப்பாக வாழ்ந்த யாதவ வம்சம் இன்று பின்தங்கிய நிலையில் உள்ளது. ஆயிரம் ஆயிரம் அரசர்களை கொடுத்த நாங்கள் இன்று பின்தங்கிய நிலைக்கு தள்ள பட்டுள்ளோம். ஆம் தமிழகத்தில் ஒன்று அரை கோடி (1 ½ crore ) யாதவர்கள் உள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவில் நாற்பது கோடியை (40 crore) நெருங்கும் யாதவர்களின் எண்ணிக்கை இந்த யாதவ சமுதாயம் பாதிக்கும் போது ஒட்டு மொத்த இந்தியாவின் வளர்ச்சியும் பாதிக்க படும்.

குறிப்பாக தமிழகத்தில் யாதவர்களை ஓட்டுவங்கியாக மட்டும் பயன்படுத்தும் திராவிட கட்சிகளை புறக்கணியுங்கள். முதல் விடுதலை வீரர் மாவீரன் அழகுமுத்து கோனார் அவர்களை புறக்கணிக்கும் திராவிட இயக்கங்களை நாம் புறகணிப்போம்.

தேசிய அளவில் யாதவர்களுக்கு என்று கட்சிகள் உள்ளன அவற்றில் சமாஜ்வாதி பெரும் பங்கு வகிக்கிறது. அவற்றை தமிழகத்தில் வளர்ப்பதன் மூலம் யாதவர்கள் ஆளும் நிலை மீண்டும் வரும். சமாஜ்வாதி கரத்தை வலுபடுதுங்கள் இதன் மூலம் யாதவர்களை யாதவரே ஆளும் நிலை ஏற்படும்.

கல்வியில் சிறந்து விளங்கும் யாதவ சமுதாய மாணவர்கள் மேற்படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இவற்றை போக்க அவர்களுக்கு தனி இட ஒதிகிடு அமல்படுத்த வேண்டும்.
BC – YADAV என்று உருவாக்கி 25% இட ஒதுக்கிடு தர வேண்டும்.

இதன் மூலம் இந்தியாவில் பெரும்பான்பை சமூகமான யாதவ சமுதாயம் வளர்ச்சி அடையும் இதனால் இந்திய நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

யாதவர்களின் ஒற்றுமையே பலம். ஒன்று படுவோம் வென்று காட்டுவோம்.

இப்படிக்கு

B.R.தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

Sunday, April 6, 2014

கருணாநிதி. தி.மு.க.,விற்கு, ஏதேனும் கொள்கைகள் உண்டா?

'எனக்கு, தி.மு.க.,வின் கொள்கைகள் தான் மிகவும் முக்கியம்' என்று, கொள்கை குன்றாக முழங்கியுள்ளார், கருணாநிதி. தி.மு.க.,விற்கு, ஏதேனும் கொள்கைகள் உண்டா? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இருந்த ஒன்றிரண்டு தி.மு.க.,வின் கொள்கைகளையும், கருணாநிதி, எப்படியெல்லாம் முக்கியமாக கருதுகிறார் என்பதைப் பார்ப்போம்...'அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு' என்ற கொள்கையை, பிரதமர் நேரு போட்ட சட்டத்திற்குப் பயந்து, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் புதைத்தார், அண்ணாதுரை.'டெசோ' என்ற சட்டத்திற்கு உயிரூட்டியது போல், தி.மு.க.,வின் அதி முக்கியமான திராவிட நாடு கொள்கைக்கு, இன்று வரை, கருணாநிதி உயிரூட்ட முனையவில்லை.மாறாக, போலியாக, 'தனித் தமிழ் நாடு தனிக்கொடி' என்று, புலம்பினார் கருணாநதி. தமிழர்கள் கண்டு கொள்ளாததால், இந்த தி.மு.க., கொள்கையையும், குழி தோண்டிப்புதைத்தார்.இந்தி எதிர்ப்பு என்பது, தி.மு.க.,வின் கொள்கை. தமிழன் எவனும், இந்தியைப் படிக்கக் கூடாது. என்று போராடி, மூன்று தலைமுறையைச் சேர்ந்த, ஐந்து கோடி தமிழர்களின் வேலை வாய்ப்பைக் கெடுத்தார் கருணாநிதி.தமிழர்களை இந்தியைப் படிக்காதே என மிரட்டி, உருட்டி, கெடுத்து, தன் வாரிசுகளுக்கு மட்டும், இந்தியை கற்றுக் கொடுத்து, தி.மு.க.,வின் மிகவும் முக்கியமான இந்தி எதிர்ப்பு கொள்கையை, அறிவாலயத்தில் ஆழமாகப் புதைத்தார் கருணாநிதி.தான் மட்டும் பளபளக்க, மஞ்சள் துண்டு அணிந்து, மஞ்சளாடை மாமுனியாக பவனி வந்து, தி.க.,வின் கி.வீரமணி கண்களில் மிளகுப் பொடியைத் துாவி, தி.மு.க.,வின் பகுத்தறிவு கொள்கையை, சி.ஐ.டி., நகர் அரண்மனை வளாகத்தில் புதைத்தார் கருணாநிதி.ஒன்பது ஆண்டு வரை, காங்கிரஸ் கூட்டணியில் கல்லா கட்டி, '2ஜி'யில் விடுதலை கிடைக்காததால், ஒப்புக்கு இலங்கைத் தமிழர்கள் பிரச்னையைக் காரணம் காட்டி, கண்களில் நீர் கசிய, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகினார்.அடுத்த வாரமே, 'மேகலை, மணிமேகலை தாயே, என் மவ கனிக்கு ராஜ்ய சபை எம்.பி.,யாக ஆதரவு தா தாயே...' என, மண்டியிட்டு, தி.மு.க.,வின் சுயமரியாதை கொள்கையை, சுப.வீரபாண்டியன் முகத்தில் கரியைப் பூசி, குழி தோண்டிப் புதைத்தார் கருணாநிதி.ஒவ்வொரு நாளும், கோபாலபுரத்தில் உள்ள கோபாலசுவாமி திருக்கோவிலில், முக்கா முக்கா மூன்று சூரைத்தேங்காய் உடைத்து, தன் பணியைத் துவக்கி, தி.மு.க.,வின் நாத்திகக் கொள்கையை, ஜெகத்ரட்சகன் வாயில் மண்ணைப் போட்டு, எட்டு கோடி மதிப்புள்ள கோபாலபுரம் மாட மாளிகையில் அடக்கமாக்கி, ஆனந்தமாகத் சுற்றி வருகிறார் கருணாநிதி.தமிழர்களே... கருணாநிதியின் தி.மு.க.விற்கு, இன்னும் வேறு ஏதேனும் கொள்கைகள் உண்டா?தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ப்ளீஸ்!

இப்படிக்கு

தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

Friday, April 4, 2014

தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி தலைவர் தாமோதரன் யாதவ் விஜயகாந்த் மனைவி பிரேமலதா அவர்களுக்கு கேள்வி?
'தர்ம யுத்தம் நடக்கும் போது, ஒருவன் எதிரணியில் போய் சேர்ந்தால், அவன், வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழப்பான்' என்று, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறியுள்ளார். இவர், எதை தர்மயுத்தம் என்று குறிப்பிடுகிறார்; நடக்கவுள்ள லோக்சபா தேர்தலையா? ஆம் என்றால், அதில் என்ன தர்மத்தை அவர் கண்டார்? 'பதவி' என்னும் மேல் துண்டைக் காப்பாற்ற, 'கொள்கை' என்னும் இடுப்பு வேஷ்டியை இழக்க, தயாராகவுள்ள தலைவர்களுக்கு இடையில் நடக்கும் யுத்தத்தையா? ஒழுக்கம், நாணயம், நேர்மை என்று மேடையில் முழங்கி, திரைமறைவில், அக்கிரமங்கள் நிகழ்த்தும், அரசியல்வாதிகளுக்கு இடையில் நடைபெறும் யுத்தத்தையா? காசுக்கு விலை போகும், உறுப்பினர்களை சம்பாதித்து, அரசியல் சூதாட்டம் நடத்தும், அசிங்கமான கட்சிகளுக்கு நடுவில் நிகழும் யுத்தத்தையா? கழற்றிவிட்ட பின், கவுரவம் பாராமல், கதவு திறக்காதா என்று காத்திருக்கும் அவல தலைவர்களுக்கும், சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் பச்சோந்திகளுக்கும் நடக்கும் யுத்தத்தையா? தன் சாதனைகளையோ, தான் செய்ய நினைக்கும் நல்ல காரியங்களையோ கூறி ஓட்டு கேட்காமல், மாற்றாரின் குறைகளை பூதாகாரமாக சித்தரிக்கும் தலைவர்களுக்கு இடையில், நடக்கும் யுத்தத்தையா? கோடி கோடியாய் சொத்து சேர்த்து, நெஞ்சுக்கு நீதியின்றி, ஊழல் சாக்கடையில் மூழ்கி, அதை மறைக்க, அப்பாவி ஜனங்களுக்கு, சில, பல இலவசங்களை கொடுத்து, அவர்களின் ஏழ்மையை, தங்களின் அரசியல் சிம்மாசனத்துக்கு அஸ்திவாரமாக்கி, செய்த பாவத்தை புதைக்க, பணத்தை வாரி விட்டு, நோட்டை ஓட்டாக்க நினைக்கும் வேஷதாரிகளுக்கு இடையில் நடக்கும் யுத்தத்தையா? அன்று, ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்தது தர்மயுத்தம். இன்றோ, ராமனே இல்லை; எல்லாம் ராவணர்கள் தான். அப்படியிருக்க, இதில் தர்மம் எங்கே வந்தது? 'பாரதம்' என்னும் சீதையை, சிறைபிடித்துள்ளது ஒரு ராவணன் இல்லை; பல ராவணர்கள். இவர்களிடமிருந்து, சீதையை காக்க, எந்த ராமன், எப்போது வருவானோ தெரியவில்லை. மக்களும், 'ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன' என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். தேர்தலுக்கு தேர்தல் பணம் கிடைகிறது. பிறகென்ன? ஓட்டு போடுவது போல, ஓட்டுக்கு பணம் வாங்குவதும் பிறப்புரிமை என்று மக்களும் எண்ண ஆரம்பித்து விட்டனர். 60 ஆண்டு பழமை வாய்ந்த கட்சியானாலும், ஆறு மாச புது கட்சியானாலும், குப்பையாகத் தான் உள்ளன. எத்தனை துடைப்பம் இருந்தாலும், கூட்டி மாளாது.
இரண்டாவது கேள்விக்கு வருவோம். தர்மயுத்தத்தில் எதிரணியில் சேர்ந்தால், உருப்படமாட்டான் என்பது அம்மையார் முடிவு. அன்று நடந்த ராம, ராவண தர்ம யுத்தத்தில், ராமர் பக்கம் சேர்ந்தான், விபீஷணன் என்னும் தர்மவான். இன்று, ராமனே இல்லாத போது, ஒரு ராவணனிடமிருந்து மற்றொரு ராவணனிடம் செல்வதில், தப்பு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், இன்றைய அரசியலைத் தீர்மானிப்பது, நேர்மையோ, நெறியோ, தர்மமோ இல்லை. காசு; பணம்; துட்டு; மணி தான்!
கடைசியாக ஒரு கேள்வி? உங்கள் கணவர் திரு விஜயகாந்த் அவர்கள் பொது கூட்டம் நடத்தி மக்களிடம் கேள்வி கேட்டு அவர்கள் விருப்பம் படி கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்னாரே இப்போது கூட்டணி வைத்ததற்கான காரணத்தை உங்கள் கட்சி தொண்டர்களுக்கு சொல்விர்களா.. உங்கள் கட்சி தொண்டர்கள் அதிர்ப்தியை எப்படி சமாளிக்க போகிறிர்கள்.. இந்த முடிவை எடுக்கும் பொது உங்கள் கேப்டன் தெளிவாக தான் இருந்தாரோ என்ற சந்தேகம் அனைவர்க்கும் ஏற்படுகிறது.. அதையும் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.
இப்படிக்கு
தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
SBS.சந்தோஷ் குமார் யாதவ்
9994982684
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

Sunday, March 30, 2014

ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா? முலாயம் சிங் யாதவ் கேள்வி?
“இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் ஆங்கிலத்தில் பேசக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், சில வாரங்களுக்கு முன் பேசினார் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்.
“நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. தாய்மொழியைப் பயன்படுத்தும் நாடுகள் நம்மைவிட முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், இந்தியாவில்தான் - ஆங்கிலம் தங்களுடைய தாய்மொழியல்ல என்றாலும் - அதில் பேசுவதில் பெருமை கொள்கிறார்கள்” என்றும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.
ஆங்கிலத்தைத் தடைசெய்யக் கோருவதன் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கற்காலத்துக்கு அழைத்துச் செல்கிறார் முலாயம் சிங் யாதவ் என்று ஒரு ஆங்கில நாளேடு கண்டித்தது. இது மிகவும் பிற்போக்குத்தனமான சிந்தனை, ஆங்கிலத்தின் மீதுள்ள வெறுப்பு காரணமாகச் சில மாநிலங்கள் பின்தங்கிய நிலைமையிலேயே இருக்கின்றன, மேற்கு வங்கம் அதற்கு நல்ல உதாரணம். தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவில் வளர்வதற்கு ஆங்கில மொழியறிவே காரணம் என்று இன்னொரு நாளேடு எழுதியது.
இயற்கையான எதிர்வினை
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் முடிந்தவர்களிடமிருந்து முலாயமுக்கு வந்த கண்டனங்களை இயற்கையான எதிர்வினையாகப் பார்க்க முடிகிறது. ‘தூதுவன் கொண்டு வந்த செய்தியை விரும்பாமல் தூதுவனையே கொன்றதைப் போல’ ஆகிவிட்டது அவர்களுடைய செயல். உலகத்தின் வளர்ந்த நாடுகளை மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினால், முலாயம் சிங் சொன்னதுதான் சரி என்ற உண்மை உறைக்கும்.
சீனா, ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா போன்ற சில நாடுகளை எடுத்துக்கொண்டாலே அவை தங்களுடைய தாய்மொழியை மட்டுமே நம்பி எல்லாத் துறைகளிலும் வெற்றிபெற்றிருப்பது புலனாகும். ஆங்கிலத்தை அவர்கள் சர்வதேச உறவுக்காக மட்டும்தான் பயன்படுத்துகின்றனர். ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தால் மட்டுமே எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க முடியும் என்பது வெறும் பிதற்றல்.
உலக நாடுகளின் அனுபவங்களோடு பார்க்கும்போது, ஆங்கில ஆதரவாளர்களின் வாதம் தோற்றுவிடுகிறது. இந்தியாவில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத்தெரிந்தவர்கள் - அப்படிப் பேச முடியாதவர்களைவிட - தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற செருக்குடன் திரிகின்றனர்.
இதுவும் ஒரு வகை வெறிதான். ஆங்கிலம் தெரிந்தவர்களால் இன்றளவும் ஊக்குவிக்கப்படுகிறது இந்த மொழிவெறி. இது இந்திய சமுதாயத்தையே இரண்டாகப் பிளந்துவிட்டது. தாய்மொழியில் நன்றாகப் பேசவும் எழுதவும் முடிந்த பெரும்பான்மையானவர்கள் இந்தச் சிறுபான்மை ‘ஆங்கில அறிவாளி’களால், தாங்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக உணர்கின்றனர். சில சமயங்களில் அவர்களுக்கு இதனால் அளவில்லாத கோபமும் ஏற்படுகிறது.
சொந்த மொழிகளின் வேரை மறந்து, வந்த மொழிக்கு வாழ்வுதந்து சிறுமைப்பட்ட பெரிய நாடு உலகிலேயே இந்தியாவாகத்தான் இருக்க முடியும்!
இந்த மொழிவெறியால் சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாச்சாரரீதியாக ஏற்படுகிற பாதிப்பு அதிகம். இன்னும் சொல்லப்போனால், இந்த நாட்டை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்துவதும்கூட இந்த மொழிவெறிதான்.
இனவெறி என்பது வெவ்வேறு வடிவங்களை எடுக்கக்கூடியது. பெரும்பான்மைச் சமூகமான வெள்ளையர்கள், சிறுபான்மை கருப்பினத்தவர்களை வெறுத்தார்கள். இதன் எதிர்வடிவம்தான் ஆங்கிலம் தெரிந்த சிறுபான்மையினர், அந்த மொழி தெரியாத பிற இந்தியர்களைத் தங்களைவிடத் தாழ்ந்தவர்களாகப் பார்ப்பதுவும்.
எந்த மொழி விருப்பமானது?
நாட்டின் முதல் எட்டு பெருநகரங்களில் மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் செய்தித்தாள் வாசிப்பவர்கள் விகிதம் பார்த்தால் சராசரியாக 2:1 என்று இருக்கிறது. அதே டெல்லியில் 1:1, புணே 7.5:1, அகமதாபாதில் 11:1 என்றிருக்கிறது.
பெருநகரங்களில் தொலைக்காட்சி பார்ப்பதிலும் மாநில மொழிகளே அதிகம் விரும்பப்படுகின்றன, 12:1. சென்னையில் அது 7:1. அகமதாபாதில் ஆங்கில நிகழ்ச்சிகளைப் பார்க்கிறவர்கள் மிகமிகக் குறைவாக இருக்கின்றனர்.
ஆங்கிலம் சிறுபான்மையே
முலாயம் சிங் யாதவ் கோரியபடி நாடாளுமன்றம் போன்ற பொது அரங்குகளில் அவரவர் தாய்மொழியில் பேசுவதை அனுமதிக்க வேண்டும். ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காக இந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் தவிர்க்கப்படும் ‘மொழிஒதுக்கல்’ தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ஆங்கில ஆதிக்கம்
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை அரசின் நிர்வாகத்தில், தொழில்துறையில், வர்த்தகத்தில், நீதிமன்ற நடவடிக்கைகளில், முக்கியமான பல துறைகளில் ஆங்கிலமே கோலோச்சுகிறது. இதற்குக் காரணம், ஆங்கிலம் தொடர்பான சில தவறான நம்பிக்கைகளே.
தவறான நம்பிக்கை 1: நவீன உலகத்துக்கு ஆங்கிலம் தேவை.
அறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் மாறு தல்களைத் தெரிந்துகொள்ள ஆங்கில அறிவு அவசியம் என்கின்றனர். இது உண்மையாக இருந்தால், உலகின் முன் னணி நாடுகள் ஆங்கிலத்தில்தான் இவற்றைக் கையாண் டிருக்க வேண்டும். அப்படி இல்லையே? ஜப்பான், ஜெர்மனி போன்றவை அறிவியல், தொழில்நுட்பத்தில் சாதித்துவருகின் றன. அந்த நாடுகளில் பாடங்கள் அவரவர் தாய்மொழிகளில்தான் கற்றுத்தரப்படுகின்றன. அத்துடன் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த நாடுகளின் பங்களிப்பும் அதிகம்.
தவறான நம்பிக்கை 2: உலகோடு ஒட்டிவாழ ஆங்கில மொழியறிவு அவசியம்.
ஏற்றுமதியில் உலகின் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளில் 8 நாடுகள், அவர்களுடைய தாய்மொழியில்தான் நாட்டு நிர்வாகத்தை நடத்துகின்றன, ஆங்கிலத்தில் அல்ல. நூற்றாண்டுகளாகத் தாங்கள் செய்துவரும் அரசு நிர்வாகத்தையும் வணிகத்தையும் அதே முறையில், அதே மொழியில் மேற்கொள்கின்றனர். உலக அரங்கில் வெற்றிகரமாக அவர்கள் வலம்வருகின்றனர்.
தவறான நம்பிக்கை 3: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஆங்கிலம் அத்தியாவசியம்.
இந்தியாவில் ஆங்கில அறிவு அதிகமாக இருப்பதால்தான், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவால் சாதிக்க முடிந்தது என்போர் பலர். ஆங்கிலம் தெரிந்தவர்களைச் சேர்த்து இந்தத் துறையில் வேலைவாங்க முடிகிறது என்பது உண்மையாக இருந்தாலும், ஆங்கிலத்தால்தான் இது சாத்தியம் என்பது தவறான எண்ணப்போக்கே.
தென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் தொழில்நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பிலும் அந்த நிறுவனம்தான் பல ஆண்டுகளாக முன்னோடியாக இருக்கிறது. அந்த நாட்டில் கொரிய மொழிக்குத்தான் முக்கியத்துவம். 1969-ல் நிறுவப்பட்ட அந்த நிறுவனம், 2012-ல் உலக அளவில் 18,900 கோடி டாலர்கள் மதிப்புக்கு விற்பனை செய்திருக்கிறது. ஐ.பி.எம்., (10,500 கோடி டாலர்கள்), மைக்ரோ சாஃப்ட் (7,800 கோடி டாலர்கள்) ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டுவிற்பனையைவிட அதிகம். ஆங்கிலம் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்ற வாதத்தை சாம்சங் உடைத்துவிட்டது.
ஆங்கிலம் விளைவித்த கேடு
இந்தியர்களை ஆங்கிலேயர்கள் ஆள வந்த பிறகு, இந்தியர் களில் மிகச் சிலரே முதலில் ஆங்கிலத்தில் பயிற்சியளிக்கப்பட்டு நிர்வாகத்தில் உதவுவதற்கு அமர்த்திக்கொள்ளப்பட்டனர். ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு அப்போது வாழ்க்கையில் சலுகைகளும் மரியாதைகளும் கிடைத்தன. அது அப்படியே பரவி, பலரையும் பற்றிக்கொண்டது.
நாடு சுதந்திரம் அடைந்த பின், இந்தியைத் தேசிய மொழியாக்கும் முயற்சிக்கு, இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. எனவே, இணைப்பு மொழியாக ஆங்கிலமே தொடரட்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. இந்த முடிவு காரணமாக இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் நிர்வாகத்திலிருந்தும் பிறவற்றிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
இதனால், கோடிக் கணக்கான மக்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகின்றனர். மனித வளத்தை முழுதாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நாடு, ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காகப் பலரை ஒதுக்கிவைத்து, மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மொழி வழியாகப் புதியதொரு தீண்டாமை கடைப்பிடிக்கப் படுகிறது. உள்ளூர் மொழிகளைத் ‘தீண்டத் தகாத’தாக ஆக்கிவிட்ட இந்தியா, உலகிலேயே புதியதொரு உதாரணம்.
இந்தியா செய்திருக்க வேண்டியது
ஜப்பான், ஜெர்மனி, கொரியா போல கல்வியை அவரவர் தாய்மொழியிலேயே அளித்திருக்க வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். ‘சரளமாக ஆங்கிலம் பேச வராதா?’ என்று வாயில் பிளாஸ்திரி போட்டு விளம்பரம் செய்து கேலி செய்யும் அவலம் இன்றும் தொடர்கிறது. இதனால், ஏராளமான இளைஞர்கள் கூனிக் குறுகி, இரண்டாம்தரக் குடிமக்கள் போல, அரைகுறை ஆங்கில அறிவுள்ளவர்கள் எதிரில் கைகட்டிச் சேவகம் செய்கின்றனர்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சமூக நீதி பேசும் அரசியல் தலைவர்கள், முதலில் ‘ஆங்கில மாயை’யை உடைக்க முன்வர வேண்டும். தாய்மொழியில் அறிவியல், தொழில்நுட்பம் கற்றுத்தரப்பட்டால், ஏராளமான மாணவர்கள் எளிதாகப் படித்து முன்னேற்றம் காண்பார்கள். மொழிவழியில் முன்னேற்றம் காண இந்தப் புதிய சிந்தனையோடு அரசியல் களம்காண சமாஜ்வாதி கட்சியை தவிர எந்த அரசியல் கட்சியாவது தயாராக இருக்கிறதா?
இப்படிக்கு
தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

TAMILNADU SAMAJWADI PARTY LEADER SPEECH CAPTAIN TV AGAINST PMK LEADER DR...

Monday, March 24, 2014

பாஜக அணியை டாக்டர் ஜெயலலிதா விமர்சிக்காதது ஏன்? - தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி தலைவர் தாமோதரன் யாதவ் கேள்வி?

மதவெறி பாஜக தமிழகத்தில் சந்தர்ப்பவாத கட்சிகளை அணிதிரட்டி அமைத்துள்ள கூட்டணியை அதிமுக விமர்சிக்காதது ஏன்?' என்று தாமோதரன் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி 11 நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
வெள்ளியன்று காரைக்குடியில் உரையாற்றிய அவர், அதிமுகதான் முதன்மையான டீம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அகில இந்திய அளவில் எந்த டீமில் அதிமுக அங்கம் வகிக்கிறது என்று அவர் குறிப்பிடவில்லை.
தனது தேர்தல் பிரச்சார உரைகளில் காங்கிரசையும், திமுகவையும் அவர் கடுமையாக சாடுகிறார். சரியாகவே விமர்சித்திருக்கிறார். அதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் தப்பித்தவறி ஒரு கூட்டத்தில்கூட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையோ, நான் தான் பிரதமர் என்று கூறிக்கொண்டு திரியும் நரேந்திர மோடியையோ அவர் விமர்சிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இந்த கேள்விக்கான பதிலை சொல்ல முடியுமா..இது எனக்கு மட்டும் ஏற்பட்ட சந்தேகம் அல்ல மக்கள் அனைவருக்கும் ஏற்பட்ட சந்தேகம்.

இப்படிக்கு

தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in