ராகுல் முழக்கம் சோனியா இத்தாலி காங்கிரசுக்கு முடிவுரை!
புதுச்சேரி நகரப் பகுதிகளில், விளம்பர பேனர்களில், 'ஊழலுக்கு எதிராக, தலைவர் ராகுல் முழக்கம்' என, எழுதி வைத்து, மக்களை, வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளனர், புதுச்சேரி காங்கிரசார்.'ஊழல்' என்ற வார்த்தைக்கு, அனைத்து மொழி அகராதிகளிலும் தேடினால் கிடைக்கும் அர்த்தம், காங்கிரஸ் தான். இது, பிறக்கும் குழந்தைக்கு கூட தெரியும். அந்த அளவிற்கு, ஊழல் சாக்கடையில் ஊறி, நாறி கிடக்கும் காங்கிரஸ் இயக்கம், உலக மகா ஊழல்களை செய்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

காங்கிரஸ் அரசின் ஊழல்களை, உலகில் எந்த ஒரு நாட்டிலும், எந்த அரசியல் கட்சியும், இன்னும் பல நுாறு ஆண்டுகளுக்கு, முறியடிக்க வாய்ப்பே இல்லை. உண்மை இவ்வாறிருக்க, 'ஊழலுக்கு எதிராக தலைவர் ராகுல்' என, முழங்குகின்றனர்.
சரி... உண்மை இதுவாக இருந்தாலும், காங்கிரசுக்கு எதிராகவே, ராகுல் முழக்கமிடுவதாகத் தானே அர்த்தம்! யானை, தன் தலையில், தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வது போல் தான், இதுவும். மன்மோகன் சிங், உலகளாவிய பொருளாதார மேதை. அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர்.
அப்படிப்பட்டவரை, அரசியல் சாக்கடையில் தள்ளி, பிரதமர் பதவி எனும் பொம்மையை, அவர் கையில் கொடுத்து, அனைத்து ஊழல்களுக்கும் அவரை பொறுப்பாளியாக்கி, அவரது மரியாதையை, அதலபாதாளத்திற்கு தள்ளியது மட்டும் தான், 10 ஆண்டு கால, காங்கிரஸ் அரசின் சாதனை. கேலிக் கூத்தான இந்த ஆட்சியின் ஊழல் சாதனை கிரீடத்திற்கு, ஒரு வைரக்கல் வேண்டுமல்லவா? அதற்காக, இத்தாலி அம்மையார் போட்ட, காமெடி நாடகத்தின் கதாநாயகன் தான், ராகுல். தானும், தன் கட்சியும், ஊழலை, வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிக்கப் பிறந்தது போல், பத்திரிகையாளர்களிடம் முழங்கியுள்ளார், ராகுல். ஆட்சியிலிருந்து காங்கிரஸ் அடியோடு அகற்றப்பட்டால் ஒழிய, நம் தேசத்தில் இருந்து, ஊழல் ஒழிய வாய்ப்பே இல்லை.
எனவே, தலைவர்(?) ராகுலின் முழக்கத்தை, அனைத்து இந்திய மக்களும் சிரமேற்கொண்டு, காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதினால், நாட்டிலிருந்து ஊழல் ஒழிந்து, ராகுலின் முழக்கம், வெற்றி பெறும். வரும் தேர்தலில், தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளில், ஒன்றில் வெற்றி பெற்றால் கூட, நம்மை விட முட்டாள், ஏமாளிகள் எவருமே இருக்க முடியாது. மீண்டும் ஒரு முறை, இவர்கள் கையில் ஆட்சி கிடைக்குமேயானால், நம் தேசத்தை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஏன் பாகிஸ்தானுக்கு கூட, ரியல் எஸ்டேட் முறையில் கூறு போட்டு விற்று விடுவர். அதன் பின், நம் தேசத்தை, ஆண்டவனால் கூட, காப்பாற்ற முடியாது.
No comments:
Post a Comment