Friday, October 11, 2013

தேவர் சமுதாயம் ராமதாசை ஒருபோதும் நம்பாது.''தேவர் சமுதாயத்தின் குற்றச்சாட்டுக்கு ராமதாசின் பதில் என்ன?''பி.ஆர்.தாமோதரன் கேள்வி
''தேவர் டி.வி.ஏனாதி பூங்கதிர்வேல் அளித்த தகவல் :

தேவர் குருபூஜைக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதைப்பற்றி மருத்துவர் ராமதாஸ் பேசுகின்றார் என்பது வேடிக்கையாக உள்ளது. தேவர் குருபூஜைக்கு தடை என்ற வார்த்தையை பிறர் துணிந்து பயன்படுத்தும் நிலையை உருவாக்கியவரே மருத்துவர் ராமதாஸ் அவர்கள்தான் என்பதை உலகறியும். தேவர் குருபூஜை பற்றி கண்ட கண்ட மனிதர்களையெல்லாம் தேவரினத்தவர் கெஞ்சித்திரிய வேண்டிய நிலையை ஏற்படுத்திய மருத்துவர் ராமதாஸ் அவர்கள் தான் தேவரினத்தின் தோழமைக் கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்வது வருத்தமான செய்தி.

தனித்துவமாக இயற்கையாக நடைபெற்றுவந்த தேவர் குருபூஜை விழாவை சீர்குலைக்கும் நடவடிக்கையாக , போட்டி மனப்பான்மையோடு , விரோத மனப்பான்மையோடு கிருத்துவ சமயத்தை தழுவி வாழ்ந்த இம்மானுவேல் சேகரன் என்பவருக்கு குருபூஜையை துவக்கி வைத்தவர்தான் மருத்துவர் ராமதாஸ் அவர்கள். ஆனால் அவருக்கும் இன்றைய சாதி மோதல்கள் ஏற்படும் காரணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லாததுபோல தேவர் குருபூஜையைப் பற்றி ஆதரவு அறிக்கை விடுகின்றார். இந்த கொடுமையை யாரிடம் போய் சொல்லி தீர்ப்பது.

மருத்துவர் ராமதாஸ் அவர்களே... பல கேள்விகள் இருப்பினும் தாங்கள் திராவிடக் கட்சிகளுக்கு எதிரான நிலையை முன்னெடுப்பதை ஒரு தமிழனாக இருந்து வரவேற்கின்றேன். ஆனால் சாதிப் பிளவுகளால் அரசியல் ஆதாயம் காணும் நீங்களும், திருமாவளவனும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றியோ , தேவர் குருபூசைப் பற்றியோ அறிக்கை விடும் அவசியம் சிறிதும் கிடையாது. குழந்தையை கிள்ளியும் விட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் இந்த அபாயநிலை எதற்காக ? உங்கள் அரசியல் சூழ்ச்சிகளின் மூலம் நீங்கள் அடையத்துடிக்கும் வளர்ச்சிக்காக எங்கள் சமூக மக்களின் அரசியல் விழிப்புணர்வற்ற நிலையை சாதகமாக்க முயற்சிக்க வேண்டாம். நீங்கள் தலித் மக்களின் நண்பராக வலம்வந்ததைப் போல இப்போதைய நிலையையும் எண்ணிக்கொண்டால் உங்கள் கணக்கு தவறு. உங்கள் சூழ்ச்சி அரசியல் லாபத்திற்காக ஸ்ரீ தேவர் பெயரைப் பயன்படுத்தினால் நீங்கள் அனுபவிக்கவிருக்கும் தெய்வத்தின் தண்டனையை யாராலும் தடுக்க இயலாது.
இவண்,
பி.ஆர்.தாமோதரன்
மாநிலத் தலைவர்
தமிழக சமாஜ்வாதிக் கட்சி
join;www.tamilnadusamajwadiparty.in

No comments:

Post a Comment