Monday, March 24, 2014

பாஜக அணியை டாக்டர் ஜெயலலிதா விமர்சிக்காதது ஏன்? - தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி தலைவர் தாமோதரன் யாதவ் கேள்வி?

மதவெறி பாஜக தமிழகத்தில் சந்தர்ப்பவாத கட்சிகளை அணிதிரட்டி அமைத்துள்ள கூட்டணியை அதிமுக விமர்சிக்காதது ஏன்?' என்று தாமோதரன் யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி 11 நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
வெள்ளியன்று காரைக்குடியில் உரையாற்றிய அவர், அதிமுகதான் முதன்மையான டீம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அகில இந்திய அளவில் எந்த டீமில் அதிமுக அங்கம் வகிக்கிறது என்று அவர் குறிப்பிடவில்லை.
தனது தேர்தல் பிரச்சார உரைகளில் காங்கிரசையும், திமுகவையும் அவர் கடுமையாக சாடுகிறார். சரியாகவே விமர்சித்திருக்கிறார். அதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் தப்பித்தவறி ஒரு கூட்டத்தில்கூட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையோ, நான் தான் பிரதமர் என்று கூறிக்கொண்டு திரியும் நரேந்திர மோடியையோ அவர் விமர்சிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

இந்த கேள்விக்கான பதிலை சொல்ல முடியுமா..இது எனக்கு மட்டும் ஏற்பட்ட சந்தேகம் அல்ல மக்கள் அனைவருக்கும் ஏற்பட்ட சந்தேகம்.

இப்படிக்கு

தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

No comments:

Post a Comment