Saturday, March 22, 2014

அரச இனத்திற்கு அரசாள வாய்ப்பு மறுக்க படுகிறது.
தமிழகத்தில் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி ஒரு கோடியே நாற்பத்தி ஏழு இலச்சம் (1,47,00,000) யாதவர்கள் உள்ளனர். (இந்தியாவில் 30 கோடிக்கு மேல்).
ஆனால் இங்குள்ள திராவிட அரசியல் கட்சிகள் யாதவர்களை ஓட்டு வங்கியாக மட்டுமே பயன்படுத்தி கொள்கின்றனர். ஒன்றை கோடி யாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
அரச இனத்திற்கு அரசாள வாய்ப்பு மறுக்க படுகிறது.
பல அரசர்களுக்கு கொண்ட இனம் என்றால் அது யாதவ இனமே.
தமிழகத்தில் முதல் சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்து கோன் யாதவை கொடுத்தவர்கள் நாங்கள்.
சிதறிக்கிடந்த பாரதத்தை ஒன்று சேர்த்து ஆண்ட பரதனை கொடுத்தவர்கள் நாங்கள். அதனால் தான் பரத நாடு என்று பெயர் பெற்றது.
முல்லைக்கு தேர் கொடுத்த பாரியை கொடுத்தவர்கள் நாங்கள்.
உலகத்தில் தன்னை வெள்ள எவரும் இல்லை என்று மார்தட்டி கொண்டு இந்தியா வந்த அலெக்சாண்டர் போருஸ் என்னும் யாதவ மன்னனால் தோற்கடிக்க பட்டான். இந்த போருஸ் (porus) கொடுத்தவர்கள் நாங்கள்.
இந்தியாவில் இராணுவத்திற்கே பணியாற்றும் மாநிலமான ஹரியானா இதில் சுதந்த்ரதிக்கு போராடிய அரசன் ராவ் துல ராம் யாதவை கொடுத்தவர்கள் நாங்கள்.
ஆந்திர, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளை சேர்த்து ஆண்ட விஜயநகர பேரரசர்கள் யாதவர்கள். இவர்களை கொடுத்தவர்கள் நாங்கள். குறிப்பாக கிருஷ்ணதேவராயர் யாதவ் விஜயநகர யாதவ வம்சத்தின் சிறந்த அரசர் ஆவார்.
இந்த பாரதத்தில் மறக்க முடியாத அரசர் என்றால் அவர் மாவீரர் அசோகர் இப்போதும் அவரது கோட்டை கம்பீரமாக உள்ளது. அந்த நான்கு முக சிங்கத்தை பார்க்கும் போது ஏதோ இனம் புரியாத சந்தோசம் நமக்கு ஏற்படும் அந்த யாதவ மன்னனை கொடுத்தவர்கள் நாங்கள்.
வீரம் என்றால் என்குல மன்னன் மாவீரன் சத்திரபதி சிவாஜியை தான் குறிக்கும் அந்த சிவாஜி யாதவை கொடுத்தவர்கள் நாங்கள்.
தேவகிரி என்னும் இடத்தை தலைமை இடமாக வைத்து கர்நாடகா, மகாராஷ்டிரா மத்திய பிரதேஷ் சேர்த்து பல யாதவ மன்னர்கள் 484 (850-1334) ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆண்டுள்ளனர். அத்தகைய யாதவ மனர்களை கொடுத்தவர்கள் நாங்கள்.
அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியர் அரசாள சத்திரிய வம்சத்தில் ஒருவரை தேடி இடை(யாதவ்) வீட்டு பையன் தத்து எடுத்து அரசனாகினார்.
அனைத்திற்கும் மேலாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்தது யாதவ இனத்தில் யது குளத்தில் பிறந்ததால் தான் தனக்கே பெருமை என்றார்.
ஆயிரம் ஆயிரம் ஆயர்கள்(யாதவர்கள்) ஆண்ட பூமி இது.
ஆனால் இன்று தமிழக அரசியலில் யாதவர்கள் நிலை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.
இத்தனை அரசர்களை கொடுத்த எங்கள் இனத்திற்கு அரசாள தெரியாத?நாங்களே எங்களை ஆச்சி செய்துகொள்வோம்.
நம்மை ஒதுக்கும் அரசை நாம் ஒதுக்குவோம். ஒவ்வரு யாதவரும் அந்த பகுதியில் நிற்கும் யாதவற்கு ஓட்டு செலுத்துங்கள். யாதவர் ஓட்டு யாதவருகே என்பதை இந்த அரசுக்கு புரிய வையுங்கள்.
இந்தியா முழுவதும் யாதவர் ஆளும் காலம் மீண்டும் வரும் அதற்கான போராட்டத்தை உங்களிடம் இருந்து எடுத்து செல்லுங்கள்.
யாவரும் வாழ யாதவரே ஆளனும். வாழ்க பாரதம் வளர்க யாதவம்.
 www.tamilnadusamajwadiparty.in

No comments:

Post a Comment