Saturday, March 22, 2014

தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி தலைவர் தாமோதரன் யாதவ் அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி?

அப்பாவிகளைத்தாக்கும் தேர்தல் இடி! சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களையும், சோதனை என்ற பெயரில் நிறுத்தி, அப்பாவிகளிடமும், அம்மாஞ்சிகளிடமும் இருக்கும் பணம் மற்றும் பொருட்களை, 'உரிய ஆவணம்' இல்லை என்று கூறி, பறக்கும் படை மூலம், தேர்தல் கமிஷன், பறிமுதல் செய்து வருகிறது.'திருமங்கலம் பார்முலா, ஏற்காடு ஏற்பாடு' என, பல தேர்தல் நடைமுறைகளைக் கண்டுபிடித்து, வான்புகழ் கொண்டது, தமிழகம். வாக்காளர்களுக்கு, பொன்னும், பொருளும் வாரி வழங்கிய, வள்ளல்கள் வாழும் மண் இது.ஓட்டளிப்பது போல், ஓட்டுக்கு துட்டு வாங்குவதும், ஜனநாயகக் கடமை என்ற மனநிலைக்கு, மக்களும் மாறி விட்டனர்.இது ஒரு புறம் இருக்கட்டும்.நாட்டில் ஓடும் வாகனங்கள் அனைத்தையும், சோதனை செய்ய தேர்தல் ஆணையம் கூறியுள்ள அறிவுரைப்படி, தேர்தல் பறக்கும் படை, எல்லா வாகனங்களையும் நிறுத்தி சோதனையிடுகிறது. சரியான ஆவணங்கள் இல்லாத, பணம் மற்றும் பொருட்களை
பறிமுதல் செய்கிறது.சமீபத்தில், புதுக்கோட்டை மாவட்டம், போரையூரிலிருந்து, வேதாரண்யம் சென்ற பேருந்தில், ஒரு பயணியிடமிருந்து, மூன்று லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள, வெள்ளிப் பொருட்களை, தாசில்தார் கைப்பற்றியுள்ளார்.அவை, காரைக்காலில் உள்ள ஒரு நகைக்கடைக்கு கொண்டு செல்லப்பட்டதாக, உரிமையாளர் கூறியுள்ளார். போதிய ஆவணம் இல்லாததால், பொருட்கள் அவரிடம் தரப்படவில்லை; பரிதாபம்!ஆனால், அரசியல்வாதிகளோ, தேர்தல் ஆணையத்தின் கண்ணில், மண்ணைத் துாவி, ஏதோ ஒரு வழியில், பணப் பட்டுவாடாவை கனஜோராக நடத்திக் கொண்டிருக்கின்றனர்.அதையெல்லாம் விட்டு விட்டு, அப்பாவி, அம்மாஞ்சி மக்கள், அத்தியாவசிய தேவைக்கு எடுத்துச் செல்லும் பணத்தை, 'ஆவணமில்லை' என்று பிடுங்கிக் கொள்வது, என்ன நியாயம்?மருத்துவமனைக்கு, அவசரமாக செல்பவர்கள், ஆவணத்துடன் தான் பணம் எடுத்து செல்வரா இல்லை திருமணத்திற்கு நகை, புடவை வாங்கச் செல்பவர்கள், ஆவணத்துடன் செல்வரா?மக்களைப் பாடாய் படுத்தும் தேர்தல் அதிகாரிகளே... உங்கள் சோதனையை, அரசியல்வாதிகளிடம், அதுவும், கட்சித் தலைவர்களிடம் இருந்து, முதலில் துவங்குங்கள்.இடி விழும்போது, சில அப்பாவிகளும் பாதிக்கப்படுவர் என்று கூறுவதுண்டு. ஆனால், இங்கோ, அப்பாவிகளை மட்டுமே தாக்குகிறது, இந்த, தேர்தல் விதி என்னும் இடி!

இப்படிக்கு

தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

No comments:

Post a Comment