Friday, April 4, 2014

தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி தலைவர் தாமோதரன் யாதவ் விஜயகாந்த் மனைவி பிரேமலதா அவர்களுக்கு கேள்வி?
'தர்ம யுத்தம் நடக்கும் போது, ஒருவன் எதிரணியில் போய் சேர்ந்தால், அவன், வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழப்பான்' என்று, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறியுள்ளார். இவர், எதை தர்மயுத்தம் என்று குறிப்பிடுகிறார்; நடக்கவுள்ள லோக்சபா தேர்தலையா? ஆம் என்றால், அதில் என்ன தர்மத்தை அவர் கண்டார்? 'பதவி' என்னும் மேல் துண்டைக் காப்பாற்ற, 'கொள்கை' என்னும் இடுப்பு வேஷ்டியை இழக்க, தயாராகவுள்ள தலைவர்களுக்கு இடையில் நடக்கும் யுத்தத்தையா? ஒழுக்கம், நாணயம், நேர்மை என்று மேடையில் முழங்கி, திரைமறைவில், அக்கிரமங்கள் நிகழ்த்தும், அரசியல்வாதிகளுக்கு இடையில் நடைபெறும் யுத்தத்தையா? காசுக்கு விலை போகும், உறுப்பினர்களை சம்பாதித்து, அரசியல் சூதாட்டம் நடத்தும், அசிங்கமான கட்சிகளுக்கு நடுவில் நிகழும் யுத்தத்தையா? கழற்றிவிட்ட பின், கவுரவம் பாராமல், கதவு திறக்காதா என்று காத்திருக்கும் அவல தலைவர்களுக்கும், சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் பச்சோந்திகளுக்கும் நடக்கும் யுத்தத்தையா? தன் சாதனைகளையோ, தான் செய்ய நினைக்கும் நல்ல காரியங்களையோ கூறி ஓட்டு கேட்காமல், மாற்றாரின் குறைகளை பூதாகாரமாக சித்தரிக்கும் தலைவர்களுக்கு இடையில், நடக்கும் யுத்தத்தையா? கோடி கோடியாய் சொத்து சேர்த்து, நெஞ்சுக்கு நீதியின்றி, ஊழல் சாக்கடையில் மூழ்கி, அதை மறைக்க, அப்பாவி ஜனங்களுக்கு, சில, பல இலவசங்களை கொடுத்து, அவர்களின் ஏழ்மையை, தங்களின் அரசியல் சிம்மாசனத்துக்கு அஸ்திவாரமாக்கி, செய்த பாவத்தை புதைக்க, பணத்தை வாரி விட்டு, நோட்டை ஓட்டாக்க நினைக்கும் வேஷதாரிகளுக்கு இடையில் நடக்கும் யுத்தத்தையா? அன்று, ராமனுக்கும், ராவணனுக்கும் நடந்தது தர்மயுத்தம். இன்றோ, ராமனே இல்லை; எல்லாம் ராவணர்கள் தான். அப்படியிருக்க, இதில் தர்மம் எங்கே வந்தது? 'பாரதம்' என்னும் சீதையை, சிறைபிடித்துள்ளது ஒரு ராவணன் இல்லை; பல ராவணர்கள். இவர்களிடமிருந்து, சீதையை காக்க, எந்த ராமன், எப்போது வருவானோ தெரியவில்லை. மக்களும், 'ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன' என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். தேர்தலுக்கு தேர்தல் பணம் கிடைகிறது. பிறகென்ன? ஓட்டு போடுவது போல, ஓட்டுக்கு பணம் வாங்குவதும் பிறப்புரிமை என்று மக்களும் எண்ண ஆரம்பித்து விட்டனர். 60 ஆண்டு பழமை வாய்ந்த கட்சியானாலும், ஆறு மாச புது கட்சியானாலும், குப்பையாகத் தான் உள்ளன. எத்தனை துடைப்பம் இருந்தாலும், கூட்டி மாளாது.
இரண்டாவது கேள்விக்கு வருவோம். தர்மயுத்தத்தில் எதிரணியில் சேர்ந்தால், உருப்படமாட்டான் என்பது அம்மையார் முடிவு. அன்று நடந்த ராம, ராவண தர்ம யுத்தத்தில், ராமர் பக்கம் சேர்ந்தான், விபீஷணன் என்னும் தர்மவான். இன்று, ராமனே இல்லாத போது, ஒரு ராவணனிடமிருந்து மற்றொரு ராவணனிடம் செல்வதில், தப்பு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், இன்றைய அரசியலைத் தீர்மானிப்பது, நேர்மையோ, நெறியோ, தர்மமோ இல்லை. காசு; பணம்; துட்டு; மணி தான்!
கடைசியாக ஒரு கேள்வி? உங்கள் கணவர் திரு விஜயகாந்த் அவர்கள் பொது கூட்டம் நடத்தி மக்களிடம் கேள்வி கேட்டு அவர்கள் விருப்பம் படி கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொன்னாரே இப்போது கூட்டணி வைத்ததற்கான காரணத்தை உங்கள் கட்சி தொண்டர்களுக்கு சொல்விர்களா.. உங்கள் கட்சி தொண்டர்கள் அதிர்ப்தியை எப்படி சமாளிக்க போகிறிர்கள்.. இந்த முடிவை எடுக்கும் பொது உங்கள் கேப்டன் தெளிவாக தான் இருந்தாரோ என்ற சந்தேகம் அனைவர்க்கும் ஏற்படுகிறது.. அதையும் கொஞ்சம் தெளிவு படுத்துங்கள்.
இப்படிக்கு
தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
SBS.சந்தோஷ் குமார் யாதவ்
9994982684
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

No comments:

Post a Comment