Sunday, April 6, 2014

கருணாநிதி. தி.மு.க.,விற்கு, ஏதேனும் கொள்கைகள் உண்டா?

'எனக்கு, தி.மு.க.,வின் கொள்கைகள் தான் மிகவும் முக்கியம்' என்று, கொள்கை குன்றாக முழங்கியுள்ளார், கருணாநிதி. தி.மு.க.,விற்கு, ஏதேனும் கொள்கைகள் உண்டா? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். இருந்த ஒன்றிரண்டு தி.மு.க.,வின் கொள்கைகளையும், கருணாநிதி, எப்படியெல்லாம் முக்கியமாக கருதுகிறார் என்பதைப் பார்ப்போம்...'அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடுகாடு' என்ற கொள்கையை, பிரதமர் நேரு போட்ட சட்டத்திற்குப் பயந்து, கிருஷ்ணாம் பேட்டை சுடுகாட்டில் புதைத்தார், அண்ணாதுரை.'டெசோ' என்ற சட்டத்திற்கு உயிரூட்டியது போல், தி.மு.க.,வின் அதி முக்கியமான திராவிட நாடு கொள்கைக்கு, இன்று வரை, கருணாநிதி உயிரூட்ட முனையவில்லை.மாறாக, போலியாக, 'தனித் தமிழ் நாடு தனிக்கொடி' என்று, புலம்பினார் கருணாநதி. தமிழர்கள் கண்டு கொள்ளாததால், இந்த தி.மு.க., கொள்கையையும், குழி தோண்டிப்புதைத்தார்.இந்தி எதிர்ப்பு என்பது, தி.மு.க.,வின் கொள்கை. தமிழன் எவனும், இந்தியைப் படிக்கக் கூடாது. என்று போராடி, மூன்று தலைமுறையைச் சேர்ந்த, ஐந்து கோடி தமிழர்களின் வேலை வாய்ப்பைக் கெடுத்தார் கருணாநிதி.தமிழர்களை இந்தியைப் படிக்காதே என மிரட்டி, உருட்டி, கெடுத்து, தன் வாரிசுகளுக்கு மட்டும், இந்தியை கற்றுக் கொடுத்து, தி.மு.க.,வின் மிகவும் முக்கியமான இந்தி எதிர்ப்பு கொள்கையை, அறிவாலயத்தில் ஆழமாகப் புதைத்தார் கருணாநிதி.தான் மட்டும் பளபளக்க, மஞ்சள் துண்டு அணிந்து, மஞ்சளாடை மாமுனியாக பவனி வந்து, தி.க.,வின் கி.வீரமணி கண்களில் மிளகுப் பொடியைத் துாவி, தி.மு.க.,வின் பகுத்தறிவு கொள்கையை, சி.ஐ.டி., நகர் அரண்மனை வளாகத்தில் புதைத்தார் கருணாநிதி.ஒன்பது ஆண்டு வரை, காங்கிரஸ் கூட்டணியில் கல்லா கட்டி, '2ஜி'யில் விடுதலை கிடைக்காததால், ஒப்புக்கு இலங்கைத் தமிழர்கள் பிரச்னையைக் காரணம் காட்டி, கண்களில் நீர் கசிய, காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகினார்.அடுத்த வாரமே, 'மேகலை, மணிமேகலை தாயே, என் மவ கனிக்கு ராஜ்ய சபை எம்.பி.,யாக ஆதரவு தா தாயே...' என, மண்டியிட்டு, தி.மு.க.,வின் சுயமரியாதை கொள்கையை, சுப.வீரபாண்டியன் முகத்தில் கரியைப் பூசி, குழி தோண்டிப் புதைத்தார் கருணாநிதி.ஒவ்வொரு நாளும், கோபாலபுரத்தில் உள்ள கோபாலசுவாமி திருக்கோவிலில், முக்கா முக்கா மூன்று சூரைத்தேங்காய் உடைத்து, தன் பணியைத் துவக்கி, தி.மு.க.,வின் நாத்திகக் கொள்கையை, ஜெகத்ரட்சகன் வாயில் மண்ணைப் போட்டு, எட்டு கோடி மதிப்புள்ள கோபாலபுரம் மாட மாளிகையில் அடக்கமாக்கி, ஆனந்தமாகத் சுற்றி வருகிறார் கருணாநிதி.தமிழர்களே... கருணாநிதியின் தி.மு.க.விற்கு, இன்னும் வேறு ஏதேனும் கொள்கைகள் உண்டா?தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ப்ளீஸ்!

இப்படிக்கு

தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

No comments:

Post a Comment