Sunday, September 14, 2014

யாருடன், யாரை ஒப்பிடுவது? ( அகிம்சையால் இந்த உலகத்தை வெல்லாம் என்று நிருபித்தவர் காந்தி . ஆட்சிக்காக சர்வாதிகாரம் செய்யும் இந்த அம்மையாரை இவருடன் ஒப்பிடலாமா )..

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'காந்திய வழியில் அம்மாவின் ஆட்சி' என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி நடத்த கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.ஒன்று மட்டும் புரிகிறது... தமிழக கல்வித்துறைக்கு, மகாத்மா காந்தியைப் பற்றியும் தெரியவில்லை; 'அம்மா'வைப் பற்றியும் தெரியவில்லை!இரு பொருள்களோ, இரு நபர்களோ ஒப்பிடப்படும்போது, அவற்றுக்குள்ளோ, அவர்களுக்குள்ளோ ஒன்றிரண்டு விஷயங்களிலாவது ஒற்றுமை இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், இரு வேறு துருவங்களை இணைக்க முயற்சித்துள்ள, நம் கல்வித்துறையின் செயல்பாடு, எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது!விசுவாசம் வேறு, யதார்த்தம் வேறு என்று, இந்த தமிழக அமைச்சர்கள், உணரவே மாட்டார்களா?மகாத்மா காந்தி எளிமையின் இருப்பிடம்; வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தன்னாட்டு மக்களின் வறுமை கண்டு இரங்கி, மதுரை மாநகரின் மேலமாசி வீதியிலே மேலாடைத் துறந்து, வாழ்நாள் முழுதும் அரையாடை மட்டும் அணிந்த காந்தி, அடக்கத்தின் உருவம்.தன் ஒருவரின் வசதிக்காக, லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது ஹெலிகாப்டருக்கும், ஹெலிபேடுக்கும் ஏராளமாக செலவு செய்த ஜெயலலிதா, ஆடம்பரத்தின் வடிவம்.அவர் சிந்தனை ராட்டையிலே; இவர் சிந்தனை கோட்டையிலே மற்றும் ஓட்டு வேட்டையிலே!விடுதலை வேள்வியிலே தன்னையே தியாகம் செய்து அடிமைத்தளை அறுத்தவர் மகாத்மா; அமைச்சர் பெருமக்களை பதவிக்காக அடிமையாக்கி, அவர்களை கேள்விக்குறி போல வளைத்து கேலிச் சித்திரம் ஆக்கியவர், 'அம்மா!'தண்டூன்றி தண்டி யாத்திரை சென்று, வெள்ளையனை வெளியேற்றி, கத்தியின்றி ரத்தமின்றி ஆடி மாதத்து அஷ்டமியில், அர்த்த ராத்திரியில் அந்நியனிடமிருந்து பெற்ற அழகான சுதந்திரப் பட்டாடையை, இந்தியத் தாய்க்குச் சூட்டி அழகு பார்த்த, அருட்செல்வர், அந்த போர்பந்தர் தந்த பொக்கிஷம்.காவிரி பொருனையுடன் போட்டி போட்டு, பெண்கள் பலரது கண்ணீர் பெருக்கெடுத்து ஓட காரணமான மது அரக்கனின் களிநடம் கண்டு களிக்கும் பெண்மணி இவர். இவருடன் ஒப்பிட்டுப் பேசினால், அந்த மகாத்மாவின் ஆத்மா, நம்மை மன்னிக்குமா?மது விலக்கும், புலால் மறுப்பும் இரு கண்களாய் கொண்டவர் காந்திஜி. மது விற்ற காசுதான் ராஜ்ய பரிபாலனத்துக்கு ஆதாரம் என்று கூறுபவர் ஜெயலலிதா. அவர் வழியில் இவர் செல்கிறார் என்று சொன்னால், அது நகைப்புக்கு இடமாகாதோ?'கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த ஒன்று நன்று உளக் கெடும்' என்ற வள்ளுவரின் அடியொற்றி, பகைவனையும் மன்னிக்கச் சொன்னவர் உத்தமர் காந்தி. இந்த, 'அம்மா'விடம், பணிவாக கும்பிடாவிட்டால் கூட பதவி பறிப்பு; எதிர்க்கட்சிக்காரர்களை எதிரிகளாய் பார்க்கும் நோக்கு.காந்தியண்ணல், ஆடம்பரத்திற்கு எதிரி; அகங்காரத்திற்கு அடிபணியாதவர்; அன்புக்கு அடிமை; எளிமைக்கு உதாரண புருஷன்; தற்பெருமை சற்றும் இல்லாதவர். வையத்து வாழ்வாங்கு வாழ்ந்து, இன்று வானுறையும் தெய்வமாகி நிற்பவர்.அவருக்கு எத்தனையோ சோதனைகள் வந்திருக்கின்றன. எத்தனையோ அவமானங்களை அவர் தாங்கியுள்ளார். எதையும் தாங்கும் இதயம் கொண்டவர். இதுவும் ஒரு சத்திய சோதனை தான்; இதையும் அவர் தாங்குவார் என்று நம்புவோம்!

Photo: யாருடன், யாரை ஒப்பிடுவது? ( அகிம்சையால் இந்த உலகத்தை வெல்லாம் என்று நிருபித்தவர் காந்தி . ஆட்சிக்காக சர்வாதிகாரம் செய்யும் இந்த அம்மையாரை இவருடன் ஒப்பிடலாமா )..

No comments:

Post a Comment