Sunday, September 14, 2014

தமிழக மக்கள் விடுதலை பெற சமாஜ்வாதி கட்சிக்கு வாய்ப்பு தாருங்கள்..
ஒரு அரசு என்ன செய்ய வேண்டுமோ, அதை விட்டு விட்டு, 'சொரணை மறக்க வைக்கும் மதுக்கடையை எடுத்து நடத்துவதும், உப்பு, புளி, மிளகாய் என்று பல சரக்கு வியாபாரம் செய்வதும், உணவகம் நடத்துவதும் ஏற்புடையதாக இல்லை.
அடிப்படை வசதிகளுடன் கூடிய பள்ளிக்கூடங்களை அமைத்து, நல்ல ஆசிரியர்களை நியமித்து, தரமான கல்வியை தருவது தான், அரசின் கடமை. அதேபோன்று, பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, தரமான சாலை, குடிநீர், மருத்துவ வசதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேற்கூரை கூட இல்லாத எத்தனையோ அரசு பள்ளிகளை, நாளிதழ்கள், படம் பிடித்துக் காட்டுகின்றன. வெறும் நான்கு மாணவர்களுக்கு ஒரு தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் என, இரண்டு ஆசிரியர்கள்; அதேசமயம்,
நுாற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நான்கு ஆசிரியர்கள் போன்ற முரண்பாடுகள், எண்ணற்ற அரசு பள்ளிகளில் இருப்பதை, நாளிதழ்கள் மூலம் அறிய முடிகிறது.
எத்தனையோ அரசு பள்ளிகளில், அறைகளைச் கூட்டிப் பெருக்கிக் குப்பை அள்ள, மாணவர்களைப் பயன்படுத்தும் அவலமும் நடந்தேறி வருகிறது.
போதிய மருத்துவர்களோ, செவிலியர்களோ, தேவையான மருத்துவ உபகரணங்களோ இல்லாமல் செயல்படும் அரசு மருத்துவமனைகளை பற்றிய செய்திகள், நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளன. பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்கள், அடிப்படை வசதியின்றி செயல்படுகின்றன.
இதுபோன்ற ஏராளமான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தாமல், 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இலவசங்களை கொடுத்து, ஓட்டுகள் வாங்குவதும், 'டாஸ்மாக்' வருமானத்தை பெருக்குவதிலும் மட்டுமே, அதிக அக்கறை செலுத்துகிறது தமிழக அரசு.
அரசு செய்வதை தனியாரும், தனியார் செய்ய வேண்டியதை அரசும் செய்கிறது. அரசு மதுக்கடையில் சாராயம், 300 ரூபாய்; அம்மா உணவகத்தில் சப்பாத்தி, 3 ரூபாய். விலையை உயர்த்தி விட்டால், குடிகாரர்களின் எண்ணிக்கை குறைந்து விடுமாம்! சிகரெட் விலை உயர்ந்து கொண்டே போகிறது. புகைப்பதை மக்கள் நிறுத்தி விட்டனரா?
இலவசங்களையும், மலிவு விலை உணவுப் பண்டங்களையும் கொடுத்து விட்டால், நாடு வளர்ச்சி அடைந்து விடுமா? மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்து விட்டதா? குடியால் ஏற்படும் குடும்பத் தகராறு, கொலையிலும், தற்கொலையிலும் முடிவதும்; பிள்ளைகள் அனாதைகளாவதும் அன்றாடம் நடக்கிறது என்பதை, அரசு ஏன் கவனத்தில் கொள்வதில்லை? 'எந்த குடி எக்கேடு கெட்டால் என்ன; வருமானம் மட்டுமே குறிக்கோள்!' என்ற சிந்தனையில் அரசு செயல்படுமானால், நாடு கூடிய விரைவில் சுடுகாடாகி போகும் என்பதில், சந்தேகம் இல்லை!
இவற்றில் இருந்து நீங்கள் விடுபட தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சியை ஆதரிப்பிர்.
உணவும் உடையும் மலிவாக வேண்டும்...
மருந்தும் கல்வியும் இலவசமாக வேண்டும்! இதுவே சமாஜ்வாதி கட்சி கொள்கை ஆகும் .
இப்படிக்கு
B.R.தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

No comments:

Post a Comment