Saturday, May 2, 2015

அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்!
சேவை தொழிலான இருந்த மருத்துவம், எப்போது பணம் பண்ணும் தொழிலாக மாறியதோ, அன்றே, பணம் கறக்கும் கம்பெனிகளாக, மருத்துவக் கல்லுாரிகள் மாறிவிட்டன! ஒரு மாணவர், தனியார் மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் படித்து, பட்டம் பெற்று வெளிவர வேண்டும் என்றால், 50 லட்சம் முதல், 75 லட்சம் ரூபாய் வரை, செலவு செய்ய வேண்டும். இதனால், ஏழைகளுக்கு எட்டாத பழமாகவே, மருத்துப் படிப்பு உள்ளது.தமிழகத்தில் உள்ள, 19 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், மொத்தம், 2,335 இடங்கள் இருக்கின்றன. இதில், அகில இந்திய ஒதுக்கீடான, 15 சதவீத இடங்கள், போக மீதியுள்ள, 2,172 இடங்களுக்குத் தான், லட்சக்கணக்கான தமிழக மாணவர்கள் மோத உள்ளனர்.பட்டம் பெற்ற பின், மக்களுக்கு சேவை செய்வர் என்ற நம்பிக்கையின் காரணமாக, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, நம் வரிப்பணம், தலா, நான்கு லட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது.பிளஸ் 2 வரை, ஆங்கில வழியில் படித்து, தேர்ச்சி பெற்ற மாணவர்களே, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பெரும்பான்மையாக படிக்கின்றனர்; அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்பு கிட்டுவதே அரிதாகிவிட்டது. அரசு கல்லுாரிகளில், மொத்தமுள்ள, 2,172 இடங்களில், அரசு பள்ளிகளில் படித்தவர்கள், வெறும், 100 மாணவர்கள் தான் இருப்பர்.இதனால், மருத்துவப் படிப்பு என்பது, செல்வந்தர்களுக்கு மட்டுமே என்ற நிலை உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பின் எப்படி, இந்த மாணவர்கள், கிராமப் பகுதிகளில் மருத்துவம் பார்க்க முன் வருவர்?அரசு பள்ளிகளில், தாய்மொழி தமிழில் படித்து, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், மருத்துவம் படிப்பதற்கு, எப்போது முன்னுரிமை கொடுக்கப்படுகிறதோ அப்போது தான், கிராம மக்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்கும்!
இப்படிக்கு என்றும் நேதாஜி முலாயம்சிங் யாதவ் வழியில்
B.R.தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiParty.in

No comments:

Post a Comment