Monday, October 7, 2013

''வன்னியன் ஆளனும் என்ற கோசத்தை கைவிட்டு யாதவனும்,மற்ற சமூகமும் சேர்ந்து தான் ஆளமுடியும் என்பதை ராமதாஸ் உணர வேண்டும்'' :

தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவர்,பி.ஆர்.தாமோதரன் வெளியிடும் அறிக்கை:

உத்தரப்பிரதேச முதல்வர் எங்கள் இளம் தலைவர் மாண்புமிகு.அகிலேஷ் யாதவை வைத்து
அரசியல் பிழைப்புத் தேட முயன்று 25 ஆம் தேதி வன்னியர் மாநாட்டுக்கு அழைத்து தனது அரசியல் நாடகத்தை அரங்கேற்ற நினைத்து காத்திருந்த ராமதாசு மூக்கரு பட்டுள்ளார்.

தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களை நம்பினால் கூட மத்தியில் எங்கள் தேசியத்
தலைவர் நேதாஜி முலாயம் சிங் யாதவ் அவர்கள் பிரதமராக உதவும்.

 ராமதாசை நம்பினால்
நாடக அரசியல் செய்யவே உதவும்.
நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்றால் செல்லாக் காசாகப் போகும் ராமாதாசை நம்பி
எவன் சேர்ந்தாலும் காலி தான்.

இந்நிலையில் தனது அரசியல் ஆதாயதிற்காக அகிலேஷ் யாதவை அழைத்து வன்னியர்
மாநாட்டு அரசியல் நடத்தி தனது தேர்தல் பேரத்தை நிகழ்த்த திட்டமிட்டார் ராமதாசு.
ஆனால் தேசியவாதியான அகிலேஷ் யாதவ் ராமதாசின் மோசடி அரசியலை தெரிந்து கொண்டு 25 ஆம் தேதி மாநாட்டுக்குயாதவ மகாசபை உள்ளிட்ட யாதவ் குலத்தின் வேண்டுகோளை ஏற்று வன்னியர் மாநாட்டை நிராகரித்த இளம் சிங்கம் அகிலேஷ் யாதவை கெஞ்சி கூத்தாடி நீங்கள் வராவிட்டால் நாங்கள் தமிழ் நாட்டில் அரசியல் செய்யவே முடியாது என்று
புலம்பியதால் இன்று வேண்டா வெறுப்பாகசென்னையில் இன்று 22.4.13.மதியம் 1000 பேர் கலந்து கொள்ளும் கூட்டதிற்கு சம்பிரதாயதிற்க்காக அகிலேஷ் யாதவ் வந்து செல்கிறார்.யாதவ மகாசபை உள்ளிட்ட யாதவ் குலத்தின் வேண்டுகோளை ஏற்று வன்னியர் மாநாட்டை நிராகரித்த இளம் சிங்கம் அகிலேஷ் யாதவை வன்னியர்
ராமதாசை கேட்கிறேன் யாதவர்களை வைத்து நடத்தும் இந்த அரசியல் பிழைப்பு
செய்ய வெக்கமாக இல்லையா?

ராமதாஸ் ஆளவேண்டும் மற்றவன் வேடிக்கை பார்க்கவேண்டும் என்ற கோசத்தை இனியாவது ராமதாஸ் கைவிட்டு யாதவர்களும்
மற்ற சமுதாயங்களும் வேண்டும் என்பதை புரிந்து கொண்டு செயல் படுவார் என்று நம்புகிறோம்.


பி.ஆர்.தாமோதரன்
மாநிலத் தலைவர்,
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி
join;www.tamilnadusamajwadiparty.in

No comments:

Post a Comment