Friday, July 18, 2014

Photo: நாம் இருப்பது பாரதமா இல்லை இங்கிலாந்தா..(என்று தனியும் இந்த மேற்கத்திய கலாச்சாரம்)

தமிழகத்தில் இயங்கும், 'கிரிக்கெட் கிளப்' இன்னமும், மேற்கத்திய கலாசாரத்தில் மூழ்கியிருப்பது, வேதனை அளிக்கிறது. ஆங்கிலேயர்கள் ஏற்படுத்திய, 'கிளப்'கள் சுதந்திரத்திற்கு பின், 67 ஆண்டுகளாகியும், மாநிலத்திற்கு ஏற்றாற் போல், தங்கள் விதிகளை மாற்றிக் கொள்ளாததும், அழைத்த விருந்தினரையே அவமானப்படுத்தி அனுப்புவதும், ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமல்ல, கண்டனத்திற்குரியது. வேட்டி கட்டுவது, தமிழகத்தின் கலாசாரம். பெரும்பகுதி பெண்கள் கலாசாரத்தை மறந்து, உடை அணிவது, தனி மனித சுதந்திரம் என்ற போர்வையில், பல கெட்டப்புகளில் வலம் வந்தாலும், ஆண்கள், குறிப்பாக, பெரிய பதவியில் உள்ளவர்கள், இன்னமும் வேட்டி கட்டி வருவது பாராட்டப்பட வேண்டும். இன்று, வழக்கறிஞர் காந்தி மற்றும் நீதிபதி அரிபரந்தாமன் போன்றவர்களுக்கு ஏற்பட்ட அவமானம், தமிழக ஆண்களுக்கு, தமிழ் பேசும் இனத்தவருக்கு ஏற்பட்ட வன்செயல். காந்திஜியை, அவருடையில் பிரிட்டிஷார் லண்டனில் அனுமதித்தனர். ஆனால், பிரிட்டிஷ்காரன் போட்ட விதிகளை, 'கிளப்'வாதிகள் என்ற பெயரில், தமிழ் கலாசாரத்தை கொச்சைப்படுத்தும் விதத்தை, ஒரு போதும் அனுமதிக்க முடியாது. விதிகளை மாற்றாதது, இவர்களது அறியாமையா அல்லது ஆணவப் போக்கா? எது எப்படி இருந்தாலும், தமிழக அரசு, உடனே தலையிட்டு, அவமானப்படுத்தப்பட்ட விருந்தினர்களான காந்தி, அரிபரந்தாமன் ஆகியோரிடம், கிரிக்கெட் கிளப் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும். தமிழகத்தில் தமிழன் அவமானபடும் நிலைமை மாறவேண்டும்..

இப்படிக்கு
B.R.தாமோதரன் யாதவ்
9444086665, 9841024342
தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சி 
www.tamilnadusamajwadiparty.in
www.facebook.com/TamilNaduSamajwadiPartyநாம் இருப்பது பாரதமா இல்லை இங்கிலாந்தா..(என்று தனியும் இந்த மேற்கத்திய கலாச்சாரம்)

www.facebook.com/TamilNaduSamajwadiParty

No comments:

Post a Comment