Thursday, September 25, 2014

அரசு பள்ளி மாணவர்கள், இரண்டாம் தர குடிமக்களா?

இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வில் தேர்வானவர்கள் எண்ணிக்கை சந்தோஷத்தைக் கொடுத்தாலும், ஒரு உண்மை நெஞ்சை உலுக்கியது; அதிர்ச்சியை தந்தது.
மொத்தம், 1,150க்கும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பெரும்பான்மையானோர், மெட்ரிக் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் படித்தவர்களே. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களில் பெரும்பான்மையோர், 1,150க்கு குறைவாகவே மதிப்பெண் பெற்றிருக்கின்றனர். இதற்குக் காரணம் என்ன?
அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இன்மை, ஆய்வக வசதிகள் இல்லாமை, கவனமின்மை ஆகிய காரணங்களால், மாணவர்களின் நிலை இப்படி ஆகி உள்ளது. இதை, ஏழை மாணவர்களின் தலைவிதி என்பதா? இந்த நிலை ஒரு புறம்; எல்லா தனியார் பள்ளிகளிலும், பிளஸ் 2 என்பது, 10ம் வகுப்பிற்கு பிறகு, இரண்டு ஆண்டு படிப்பாகி விட்டது. இது நிதர்சனமான, மறுக்க முடியாத உண்மை.
இதை தட்டிக் கேட்க வேண்டிய கல்வித் துறையும், அரசும் வேடிக்கை பார்க்கின்றன. 10ம் வகுப்பிற்கு பிறகு, இரண்டு லட்சம், நான்கு லட்சம் ரூபாய் என, பிளஸ் 2 படிப்பு விலை போகிறது. ஹாஸ்டல் வசதி என்ற பெயரில், மாணவ, மாணவியர், இரண்டு ஆண்டுகளும், பிளஸ் 2 பாடத்தை மனப்பாடம் செய்து, ஆட்டு மந்தைகளாக்கப்படுகின்றனர்.பிளஸ் 1 இறுதி தேர்வு என்பது, தனியார் பள்ளிகளில் வெறும் கண் துடைப்பே!
பிளஸ் 1 இறுதி தேர்வு சமயத்தில் மட்டும், தனியார் பள்ளிகளில் புத்தகத்தை வைத்தோ, விடைகள், 'ஜெராக்ஸ்' எடுத்து கொடுக்கப்பட்டோ, தேர்வு நடத்தி முடிக்கப்படுகிறது. இதற்கென தனி ஆதாரம் எதுவும் தேவையில்லை. சாதாரணமாக, மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் பக்கத்து வீட்டு மாணவ, மாணவியரிடம், 'உங்களுக்கு பிளஸ் 1 இறுதி தேர்வு எப்படி நடத்துகின்றனர்?' என்று கேட்டால், அவர்களே கூறுவர். பிளஸ் 2 பாடம் நடத்துவது குறித்து கேட்டாலும், உண்மை நிலை தெரியும்.
தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங், இதர மேல்மட்ட படிப்புகளில் தஞ்சம் புகுகின்றனர். ஆனால், ஏழை மாணவர்களின் கதி, எப்போதுமே, அதோகதியாக தான் உள்ளது. பிறகு எப்படி, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் மற்ற மேல் படிப்பிற்கு, 'கட்-ஆப்' மதிப்பெண்களுக்கு போட்டி போட முடியும்? இது யாருடைய குற்றம்? ஏழையாக பிறந்த அரசுப் பள்ளி மாணவனின்
குற்றமா? கைகட்டி வேடிக்கை பார்க்கும் கல்வித் துறையின் குற்றமா? கண்டும் காணாமல் இருக்கும் அரசின் குற்றமா?

அரசு பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் வேலை செய்பவர்களும் கூட, தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் படிக்க வைப்பதில்லை. ஆனால், இதே பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு டாக்டர், இன்ஜினியர் போன்ற தொழில் கல்விக்கு சேர்த்துவிடும்போது மட்டும், அரசு கல்லூரிகளையே நாடுகின்றனர். அதே போல், வேலை வாய்ப்பை பெற முயற்சிக்கும் போதும், அரசு வேலையையே விரும்பி தேர்வு செய்கின்றனர்.ஒரு நேரத்தில் கசந்த அரசு சேவை, இன்னொரு நேரத்தில் இனிக்கக் காரணம் என்ன?ஆனால், வசதி வாய்ப்பற்ற பெற்றோரோ, தங்கள் குழந்தைகளின் கல்விக்கு அரசு பள்ளிகளையே நம்பி படிக்க வைக்கின்றனர். அரசு பள்ளிகளில் நிலவும் எல்லா கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்து படித்து, அதிலும் வெற்றி பெறுகின்றனர். கல்லூரி வாழ்வில் அடி எடுத்து வைக்கும் போதும், வேலை வாய்ப்பை எதிர் கொள்ளும் போதும், இந்த அடித்தட்டு மக்களின் குழந்தைகள் போட்டி போடுவது, யாருடன் தெரியுமா? இதுவரை அரசு சேவையை ஒதுக்கி இருந்த, மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த மாணவர்களுடன் தான்!
இந்த நிலை, சமூக நீதிக்கு புறம்பானது. எனவே, கல்லூரி படிப்புகளிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும், அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு குறைந்தது, 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். அப்போது தான், அரசு பள்ளிகளில் படிக்க வைக்க, போட்டி வரும். அப்படி ஒரு நிலை வந்தால், அரசு பள்ளிகளின் தரம் குறைவது பற்றி அனைவரும் கவலைப்பட்டு, அதை மேம்படுத்த முற்படுவர்.கடந்த, 1967க்குப் பிறகு ஆட்சிக்கு வந்த திராவிட கட்சி ஆட்சிகளின் கபட நாடகத்தால், தற்போது தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மட்டும், இந்தி மொழி பயிற்றுவிக்கப் படுவதில்லை. ஆனால், அதே திராவிட ஆட்சியாளர்களின் பிள்ளைகள் படிக்கும் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இந்தி மொழி நன்றாக படித்து, வட நாடு வரை சென்று வேலையும், எம்.பி, மத்திய அமைச்சர் போன்ற பதவிகளையும் பெற்று மகிழ்ந்து அனுபவிக்கின்றனர்.இந்த அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தரம் பற்றியோ, அங்கு கடந்த, 40 ஆண்டுகளுக்கு மேலாக, இந்தி மொழி கற்பிக்கப்படாததால், தேர்தல் நேர பகடை காய்களான அடித்தட்டு மக்களின் குழந்தைகள் இருண்டு போயுள்ள எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ கடுகளவும் இல்லை.இந்நிலை மாற வேண்டுமானால்,தமிழகத்தில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அனைத்து மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்களின் பிள்ளைகள், அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவிக்க விரும்புபவர்கள் அனைவரும், அரசு பள்ளிகளில் மட்டுமே கட்டாயம் படிக்க வேண்டும் என, அரசு சட்டம் இருக்க வேண்டும். அரசின் சலுகைகளை பெற்று படித்தவர்கள் அனைவரும், வேலைக்காக வெளிநாடு சென்று விடாமல், இந்தியாவில் எங்காவது, குறைந்தது மூன்று ஆண்டுகள் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டமும் வேண்டும்.கடைக்கோடி குடிமகன் கட்டிய வரி பணத்தில் படிப்பை முடித்தவர்கள், நம் மக்களுக்கு சேவை செய்யாமல், நம் மக்களின் கஷ்டங்களை உணராமல், வெளிநாட்டுக்கு சென்று சொகுசு ழ்க்கை வாழ அனுமதிக்க கூடாது. அரசு பள்ளிகள் வேண்டாம் என்பவருக்கு, அரசில் எந்த வேலையும் இல்லை, அரசு சார்பான பதவிகளும் இல்லை என்ற நிலை ஏற்பட்டால், அரசு பள்ளிகள் சிறப்படையும், நாடும் உயர்வடையும். இப்படி ஓர் சட்டம் கொண்டு வருவது முடியாத காரியமல்ல. 69 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் போலவே, இதுவும் சாத்தியம் தான். தமிழகத்தின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை இருந்தால், இது நிச்சயமாக முடியக்கூடியதே; சாத்தியமே.இதுவே, தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் உயர்வதற்கான தாரக மந்திரம். இது சத்தியமே! சமூக ஆர்வலர்களும், அறிவு ஜீவிகளும், நீதி அரசர்களும் மவுனம் கலைந்து சமூக நீதி காப்பரா?

Photo: அரசு பள்ளி மாணவர்கள், இரண்டாம் தர குடிமக்களா?

No comments:

Post a Comment